காதல் என்பது வாழ்வில் சந்திக்கும் ஓர் அழகான கவிதை. காதலுடன் வாழக்கை முடிவதில்லை. அதற்குப் பின்னும் வாழக்கையின் அடுத்த கட்டம் உண்டு. ஆனால், காதலால் பல நல்லவை, கெட்டவை முடிவு செய்யப்படும். காதலுக்குப் பின் வாழும் வாழக்கைதான் காதலின் அர்த்தத்தை புரியவைக்கும். எனவே அடுத்த கட்ட வாழ்வை வாழ்ந்தே தீரவேண்டும். ஆனந்த தாண்டவம் சொல்லும் கதை இதுதான்.
இயக்குனர் ஷங்கரின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் காந்தி கிருஷ்ணா ஏற்கனவே 'நிலாக்காலம்', 'செல்லமே' படங்களை இயக்கியவர்.
"நாவல் என்பது வேறு மொழி. சினிமா என்பது வேறு மொழி. இதைச் சரியாகப் புரிந்து கொண்டு திரை மொழிபெயர்ப்பு செய்தால்தான் நாவல் திரையில் வெற்றி பெறும். கதையின் விளக்கப் படமாக எடுக்கப்பட்டால் வெற்றி பெறமுடியாது. இதை நான் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன்" என்கிறார் இயக்குனர்.
இப் படத்துக்காக 40 லட்சம்ரூபாய் செலவில் மிதக்கும் வீடு ஒன்றை உருவாக்கி அதில் பாடல் காட்சியை எடுக்கப் பட்டுள்ளது. கலை இயக்குநர் தோட்டாதரணியின் கைவண்ணத்தை அந்த வீடு பேசும்.
படத்தின் கதை திருநெல்வேலி, பாபநாசம் பகுதியில் நடக்கிறது. அங்கு காரையாறு அணைக்கட்டில் 150 அடி ஆழமும் முதலைகளும் நிறைந்த நீரில்தான் இந்த மிதக்கும் வீடு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட 80 நாட்களில் 40 நாட்களில் 60 சதவீதம் படம் முடிவடைந்துள்ளது. திருநெல்வேலி, பாபநாசம், காரையாறு, சேர்வலாறு அணைக்கட்டுகள், ஊட்டி போன்ற இடங்களில் இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளில் பாதிக்கதை படமாக்கப்படவுள்ளது.
|