ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கப்போகும் அப்படத்திற்கு 'அங்காடி தெரு' என பெயரிடப்பட்டுள்ளது. "வீட்டுக்கு வீடு வாசற்படி போல தெருவுக்கு தெரு பல கதைகள் உண்டு. அதில் ஒன்றைதான் 'அங்காடி தெரு' வில் பதிவு செய்யப் போகிறேன்" என்கிறார் வசந்தபாலன்.
நிஜவாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதை என்பதாலும் கதையின் இயல்பு சிதறிவிடக்கூடாது என்பதாலும் புதுமுகம் ஒருவரை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளார். திண்டுக்கல் திரையரங்கம் ஒன்றில் பொரிகடலை விற்பவரின் மகனான மகேஷ் என்ற இளைஞர்தான் வசந்தபாலனின் கண்களில் அகப்பட்ட அதிஷ்டசாலி.
பதினைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகங்களிலிருந்து சலித்தெடுத்த வாலிபர்தான் இந்த மகேஷ். மாநிலஅளவிலான வாலிபால் பிளேயராக இருக்கும் மகேஷ் ஆரம்பத்தில் கூச்சப்பட்டாராம். அவரது கூச்சத்தை போக்கியது 'கற்றது தமிழ்' நாயகி அஞ்சலியின் டியூசன்தானாம். யெஸ். கதையின் நாயகியாக நடிப்பது அஞ்சலிதான். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
'இது ஒரு கடைவீதியை பற்றிய கதை. அங்குள்ள மனிதர்களின் ஈரம், காதல், நெகிழ்ச்சி, பரவசம் எல்லாவற்றையும் இந்த கடைவீதி பிரதிபலிக்கும்' என அங்காடி தெரு பற்றி சிலாகிக்கிறார் இயக்குனர்.
|