'சித்திரம் பேசுதடி' படத்துக்குப் பிறகு மிஷ்கின் 'நந்தலாலா'வை இயக்குவதாக இருந்தார். பலவேறு காரணங்களால் அந்த புராஜெக்ட் தள்ளிப்போக, 'அஞ்சாதே' படத்தை இயக்கினார்.
தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றி பெற்றதால் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால், அவரது ஆர்வமோ 'நந்தலாலா'!.
பெரிய ஹீரோக்கள் நடிக்க முன்வராத நிலையில் தானே ஹீரோவாகியிருக்கிறார். இதற்காக தனது தொண்ணூறு கிலோ உடம்பை குறைக்கும் வேலையில் சீரியஸாக இறங்கியுள்ளார்.
இனி தொடர்ந்து ஹீரோவாக நடிப்பீர்களா? என கேட்டதற்கு, மிஷ்கின் அளித்த பதில், இல்லை! 'நந்தலாலா'வோடு ஹீரோ வேஷத்துக்கு குட்பையாம். அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். அவரிடம் கதை சொல்லி அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளார் மிஷ்கின்.
இது ஆக்ஷ்ன் படமாக இருக்கும்!
|