கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பித்த பிறகு புதிய படங்களின் தொலைக்காட்சி உரிமை வாங்க போட்டா போட்டி. பிரகாஷ்ராஜ் தயாரித்த 'மொழி' படத்தின் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியது. நல்ல நாள் எதுவும் வந்தால் கலைஞரில் கண்டிப்பாக மொழியை பார்க்கலாம்.
இந்நிலையில் 'வெள்ளித்திரை'யின் ஒளிபரப்பு உரிமையை இரண்டு கோடிக்கு விலை பேசியது, சன்.டி.வி. இதனை கேள்விப்பட்ட கலைஞர், கருணாநிதி, நேரடியாக தலையிட்டு 'வெள்ளித்திரை'யின் ஒளிபரப்பு உரிமையை அதே இரண்டு கோடிக்கு கேட்டிருக்கிறார்
முதல்வர் கேட்டால் மறுக்க முடியுமா? 'வெள்ளித்திரை' உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கே சென்று சேர்ந்துள்ளது.
முன்னணி ஹீரோக்கள் யாரும் நடித்திராத ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு வாங்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறையாம்.
|