'லீ'க்குப் பிறகு சிறிது இடைவெளி விட்டவர், புதிதாக இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று 'சித்தார்த்தா'.
காரண காரியமின்றி படத்திற்குப் பெயர் வைப்பவர்கள் மத்தியில் காரணத்தோடு 'சித்தார்த்தா' என பெயர் வைத்துள்ளார் இயக்குனர் ஆ.சிவாதேவன். சித்தார்த்தா இவருக்கு முதல்படம். சிவா தேவனின் குரு, பாலசந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சி்த்தார்த்தனாக புற இன்பங்களில் திளைத்திருக்கும் ஒருவன் புத்தனாக விரும்புகிறான். அவனது விருப்பத்தை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா என்பது கதை. படத்தின் சுவாரஸியமான விஷயம், வில்லன் என்று இதில் யாருமில்லை. சூழ்நிலைகளே வில்லன் என சுவாரஸியத்தை அதிகப்படுத்துகிறார் இயக்குனர்.
ப்ரெண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சுதாகரன் தயாரிக்கிறார். இசை விஜய் ஆன்டனி. ஒளிப்பதிவு வேல்ராஜ்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
|