பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த சசிகுமார் தயாரித்து இயக்கும் படம் 'சுப்ரமணியபுரம்'. ஜெய் ஹீரோவாக நடிக்க கதாநாயகியாக ஆந்திரா மா டிவியில் தொகுப்பாளியாக இருந்த சுவாதி அறிமுகமாகிறார். கஞ்சாகருப்பு, சமுத்திரகனியுடன் இயக்குனர் சசிகுமாரும் இதில் நடித்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமாக, யுகபாரதி, தாமரை பாடல்களை எழுதியுள்ளனர்.
பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் இன்று காலை நடந்தது. இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன், சிம்பு தேவன், வெற்றிமாறன் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம.நாராயணன் ஆகியோர் இணைந்து பாடல்களை வெளியிட்டனர்.
மதுரை சுப்ரமணியபுரத்தின் பின்னணியில் 80களில் நடக்கும் கதையாம் இது, திரையிடப்பட்ட இரண்டடு பாடல்களில் அந்த காலகட்டங்களை கண்முன் நிறுத்துவதுபோல இருந்தது காட்சியமைப்புகள். உடைகள், தலை சீவலில் ஆரம்பித்து இயக்குனருடன் இணைந்து ஆர்ட் டைரக்டரும் ஒளிப்பதிவாளரும் நிறைய மெனக்கெட்டிருப்பது புரிந்தது
அதிலும் தாமரையின் வரிகளில்
'கண்கள் இரண்டால் - உன் கண்கள் இரண்டால் என்னைக்கட்டி இழுத்தாய் - இழுத்தாய்...'
என்ற பாடல் கேட்ட நொடியிலேயே மனதில் பதிந்தது.
|