Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

இதயமுள்ளவர்கள் கவனத்திற்கு...
- 09.05.2008

By Amalan
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பார்கள். அப்படியானால் 36 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக நல்ல உள்ளங்களின் உதவியை நாடியிருக்கிறார் நடிகர் ராகாவா லாரன்ஸ்.

Raghava Lawrance

ராகவா லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் ஊனமுற்ற, ஆதரவற்றவர்களுக்கு, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இதற்காக ஆசை ஆசையாக கட்டிய தனது வீட்டையெ காலி செய்து ஊனமுற்றவர்களுக்கு கொடுத்துள்ள லாரன்ஸ், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

"சின்ன வயசில் பிரைன் ட்யூமர் நோயால் அவதிப்பட்டு உயிர்பிழைத்தவன் நான். அதனால் ஊனமுற்றவர்களின் வேதனையை நான் நன்கறிவேன்" என்னும் லாரன்ஸ், தற்போது இருதயத்தில் ஓட்டை விழுந்த 36 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள சிறுவர் சிறுமிகளை மீடியாக்கள் மத்தியில் அறிமுகம் செய்துவைத்த லாரன்ஸ், "நம்ம வீட்டு குழந்தைக்கு சளி பிடித்தால்கூட கவலைப்படும் நம்மால், இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் படும் வேதனையை உணரமுடியும் எனவே இந்த குழந்தைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்" என வேண்டுகோள் வைத்தபோது அதனை படம்பிடித்த கேமராக்களுக்குகூட கண்ணீர் கசிந்துவிடும் அளவிற்கு மனம் துவண்டது.

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து உயிர்பிழைத்துள்ள மதுரை சிறுவன் ஒருவன் 'நன்றி' என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தபோது அந்த இறைவனே லாரன்சுக்கு நன்றி சொல்வதுபோல தோன்றியது.

Raghava Lawrance

லாரன்ஸின் தாயுள்ள வேண்டுகோளை கேட்ட இயக்குனர் பேரரசு 50,000 ரூபாய்க்கான காசோலையை கொடுத்ததுடன் 'பாண்டி' படத்தில் தான் எழுதிய பாடலுக்கான சம்பள தொகையையும் தருவதாக ஒப்புக்கொண்டார். சினிமா பிரஸ் கிளப் சார்பில் 10,000 ரூபாய் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள சினிசவுத் வாசகர்களுக்கு நாம் வைக்கும் வேண்டுகோள் இதுதான்.

இந்த குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக தாங்கள் கொடுக்கும் ஒரு ரூபாய்கூட ஒரு குழந்தைகளின் உயிர்காக்க உதவும். எனவே, தாங்கள் உதவி செய்ய விரும்பினால் கீழ்கண்ட முகவரியிலும், தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு உதவலாம்.

சினிசவுத்தும் தனது பங்கிற்கு உதவிகளை செய்யும்.

முகவரி :-

LARANCCE CHARITABLE TRUST,
Regd No: 1372/2005
2/4 1st Cross street, 3rd Avenue
Ashok Nagar,  Chennai 600 083.

www.larenccecharitabletrust.com

Email Address : larenccecharitabaletrust@yahoo.com
larenccecharitabletrust.blogspot.com

நேரடியாக வங்கிக்கு பணம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்கண்ட சேமிப்பு கணக்கு எண்ணிற்கு (S.B.Account) அனுப்பலாம்.

Standard Chartered Bank - S.B A/C No. 4360 Ashok Nagar Branch.

Canara Bank S.B A/C No - 46149 Ashok Nagar Branch.

State Bank Of India - S.B A/C No. 303557224 Ashok Nagar Branch







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us