முன்பு இருந்ததைவிட மூன்று அங்குலம் மார்பகத்தை பெரிதாக்கிக் கொண்ட சுசான் நூடா, அறுவை சிகிச்சைக்கான கட்டணம் இரண்டரை லட்சத்தை வீட்டிற்கு சென்றபின் கொடுப்பதாகக் கூறி, அதனை ஐந்து வருடங்களாக செலுத்தவில்லை. இனியும் இழுத்தடித்தால் நடிகை பிபாஷா பாசு மீது வழக்கு தொடரப் போவதாக கூறினார் அறுவை சிகிச்சை செய்த அசோக் குப்தா.
சுசான் நூடா செய்து கொண்ட அறுவை சிகிச்சைக்கு பிபாஷா பாசு மீது ஏன் பணம் கேட்டு வழக்கு தொடர வேண்டும்?
2002-ம் ஆண்டு ஆகஸ்டு 17 அசோக் குப்தாவிடம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுசான் நூடா வேறுயாருமில்லை. மாடலும், நடிகையும், ஜான் ஆபிரகாமின் காதலியுமான பிபாஷா பாசுதான். சொந்த பெயரில் சிகிச்சை எடுத்து, அது மீடியாவுக்கு தெரிய வந்தால் இமேஷ் பாதிக்கப்படும் என்று பொய் பெயரில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இத்தனை ஊஷாராக இருப்பவர் சிகிச்சைக்கான பணத்தையும் கொடுத்திருக்கலாம். இப்போது பிபாஷாவுக்கு இருப்பது உண்மையான சைஸ் அல்ல என்பது அகில உலகினருக்கு தெரிந்து விட்டது. ஒருவேளை மூன்று அங்கும் பெரிதானதற்கு இரண்டரை லட்சம் பெரிய தொகை என நினைத்தாரா?
எப்படியோ, அசோக் குப்தாவுக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை. "ராக்கி சாவந்த் உள்பட எத்தனையோ நடிகைகளுக்கு இதே அறுவை சிகிச்சை செய்திருக்கேன், அவர்கள் எல்லாம் பிபாஷா மாதிரி ஏமாற்றியதேயில்லை" என்று புலம்பினார் அசோக் குப்தா.
ரசிகர்களே உஷார்! நீங்கள் கண்ணால் பார்ப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
|