Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஜான் மெக்கினளன் ஈஸ் பேக்!
- 09.07.2007

By JBR
'டை ஹார்டு' படத்தின் மூன்று பாகங்களிலும் எதிரிகளை தீரமுடன் வீழ்த்திய, எதற்கும் அஞ்சாத, டோண்ட் கேர் சிட்டி காப் ஜான் மெக்கினளன் இந்தமாதம் மீண்டும் உங்களை சந்திக்க வருகிறார்.

Bruce willis

ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸை புகழின் உச்சியில் உட்கார வைத்த படம் 'டை ஹார்டு.' 1988-ம் ஆண்டு 28 மில்லியன் டாலர்களில் உருவான இப்படம் உலகம் முழுவதும் 187 மில்லியன் டாலர்களை குவித்தது. ஒரு கட்டிடத்தினுள் பிணைக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிக்கும் புரூஸ் வில்லிசின் சாகசம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த ஜான் மெக்கினளன் போலீஸ் அதிகாரி வேடம் புரூஸ் வில்லிஸ் பெயர் அளவுக்கு ரசிகர்கள் மனதில் பதிந்து போனது.

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து 1990-ம் ஆண்டு டை ஹார்டின் இரண்டாம் பாகம் வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட். பிறகு வெளியான மூன்றாவது பாகம் 'டை ஹார்டு, வித் ஏ வென்ஜியன்ஸ்' படமும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. ரகசிய உளவாளி 007 அளவுக்கு ஜான் மெக்கினளன் கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதிந்து போனது.

ஹீரோவாக கோலோச்சிக் கொண்டிருந்த புரூஸ் வில்லிஸ் திடீரென துக்கடா கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இது அவரது ஸ்டார் இமேஜை பாதிக்கும் என்பதுடன் வார்னர் பிரதர்ஸ் போன்ற மிகப்பெரிய ஸ்டுடியோக்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பலவீனப்படுத்தும் என அவரது நலம் விரும்பிகள் எச்சரித்தனர்.

Bruce willis

இவை எதையும் காதில் வாங்கவில்லை புரூஸ் வில்லிஸ். மாறாக சின்ன ரோல்களில் விரும்பி நடித்தார். ஹாலி பெர்ரி நடித்த 'பெர்பெக்ட் ஸ்ட்ரேஞ்சர்' படத்திலும் சிறிய ரோலில் தோன்றினார் புரூஸ். இதற்கு அவர் சொன்ன விளக்கம், "ஹாலிவுட்டில் சின்ன வேடம் பெரிய வேடம் என்று எதுவும் இல்லை. சின்ன நடிகர் பெரிய நடிகர் என்றுதான் இருக்கிறார்கள்."

புரூஸின் வார்த்தைகள் நிஜம். அவரை வைத்து பலநூறு மில்லியன்கள் செலவழித்து 'டை ஹார்டு' படத்தின் நான்காவது பாகத்தை தயாரித்துள்ளனர். ஆக்ஷ்ன், பிரமாண்டம், கிராபிக்ஸ் என பல விஷயங்கள் இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தில் ஆவலுடன் எதிர்பார்ப்பது, அசராமல் அதிரடி நிகழ்த்தும் ஜான் மெக்கினளனை!

இம்மாத இறுதியில் இப்படம் தமிழிலும் ரிலீஸாகிறது. மெக்கினளனை சந்திக்க நீங்களும் தயார்தானே?







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
பொக்கிஷம்
சிவகிரி
அழகர் மலை
கோப்புகள்
முன்னோட்டம்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us