எஸ்.ஜே.சூர்யா, சேரன், சீமான், தங்கர்பச்சான், அமீர், சுந்தர் சி... என்று பாதி இயக்குனர்கள் அரிதாரம் பூசிவிட்டார்கள். 'திமிரு' தருண்கோபி 'காட்டுப்பயலே' படம் மூலம் நடிகராகிறார். 'உன்னை சரணடைந்தேன்' சமுத்திரக்கனி 'சுப்ரமணியபுரம்' படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் படத்தில் இயக்குனர் ரமணா வில்லனாக நடிக்கிறார். தொடர்ந்து இரண்டு படங்கள் பிளாப் கொடுத்த ரமணாவுக்கு இந்த புதிய புரொமோஷன் உற்சாகம் அளித்துள்ளது.
ரமணாவைப் போல வில்லனாகும் இன்னொரு இயக்குனர் சரவண சுப்பையா. 'சிட்டிசன்', 'ஏபிசிடி' படங்களை இயக்கிய சரவண சுப்பையாவை வில்லனாக்கியிருப்பவர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.
இவரது 'மாஸ்கோவின் காவிரி' படத்தில் சரவண சுப்பையா வில்லனாக வருகிறார். இவர்களைத் தவிர இயக்குனர் மஜித்தும் தனது 'கி.மு.' படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.
இயக்கத்திலிருந்து நடிப்புக்குச் சென்ற முக்கால்வாசி இயக்குனர்கள் நடிப்பிலேயே மூழ்கி விடுகின்றனர். வேலை கம்மி, காசும் பாப்புலாரிட்டியும் அதிகம் என்பதே இதற்கு காரணம்.
|