இதில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த பிறகே, ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது விஜய்யின் மார்க்கெட்.
விஜய்யின் தம்பியான விக்ராந்தின் நிலையும் இப்போது சொல்லும்படி இல்லை. அண்ணன்போல விஜயகாந்துடன் இணைந்து நடித்தால் விடிவு கிடைக்குமா ?
'எங்கள் ஆசான்' படத்தில் விஜயகாந்துடன் விக்ராந்தும் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எஸ்.வி.தங்கராஜ் தயாரிக்கும் 'எங்கள் ஆசானி'ன் படப்பிடிப்பு சென்றவாரம் தொடங்கியது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.
விஜயகாந்த் மற்றும் படத்தின் நாயகி ஷெரில் பிரிண்டோ சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்படுகின்றன. விக்ராந்த் இரண்டாவது ஷெட்யூல்டில் இடம் பெறுவார் என்கிறார்கள்.
விஜயகாந்துடன் 'பெரியண்ணா' படத்தில் சூர்யாவும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|