தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களின் ஷூட்டிங் மலேசியாவில் நடந்து வருகிறது.
எஸ்.வி.சேகர் தனது மகனை வைத்து தயாரித்த 'வேகம்' முழுக்க மலேசியாவில் தயாரானது. அதேபோல 'பில்லா'வும் மலேசியாவில்தான் படமாக்கப்பட்டது. கமலின் 'தசாவதாரம்' படத்தின் சண்டைக்காட்சியொன்று, கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் படமாக்கப்பட்டது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'குருவி'யின் சில காட்சிகளும்கூட மலேசியாவில்தான் எடுக்கப்பட்டது.
இம்மாதம் பதினைந்தாம் தேதிக்கு மேல் சூர்யா நடிக்கும் 'அயன்' படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா, தமன்னா உள்ளிட்டோர் மலேசியா செல்கின்றனர்.
மே பதினைந்துடன் 'வாரணம் ஆயிரம்' படத்தின் சூர்யா சம்பந்தப்பட்ட பகுதியின் சூட்டிங் முடிவடைகிறதாம். அதற்குப் பிறகு சூர்யா சம்பந்தப்பட்ட 'அயன்' படக்காட்சிகளை மலேசியாவிலும் பிறகு தென்னாப்பிரிக்காவிலும் படமாக்குகிறார் கே.வி.ஆனந்த்.
|