அவதார அணிவகுப்பு
- 10.05.2008
By JBR
வெளியீட்டு தேதி அறிவிக்கவில்லையென்றாலும், 'தசாவதாரம்' குறித்து தினமொரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
|
|
|
தென்னிந்திய மொழி படங்களில் தசாவதாரத்திற்குதான் அதிக பிரிண்டுகள் போடப்படுகிறதாம். கன்னடப்பட உரிமை மட்டும் ஒரு கோடியே எண்பத்தைந்து லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
எல்லாம் சரி, கமல் நடிக்கும் பத்து கெட்டப்புகள் என்ன?
இராமனுஜர், 95 வயது கிழவி, எட்டடி உயர மனிதர், விஞ்ஞானி, ஜார்ஜா புஷ், தொழிற்சங்கத்தலைவர், வெள்ளைக்கார வில்லன், சி.பி.ஐ அதிகாரி, சர்தார்ஜி மற்றும் சைனாக்காரர்.
இதில் இராமனுஜர் கதைபாத்திரத்திம் முக்கியமானது. எட்டடி உயர மனிதராக வரும் கலிபுல்லா கான் கதாபாத்திரம் அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கும் என்கிறார்கள். சைனாக்காரராக வரும் தற்காப்புக்கலை நிபுணரின் சண்டைக்காட்சியும், தொழிற்சங்க தலைவரின் வீராவேச நடவடிக்கையும் ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.
95 வயது மூதாட்டி வேடத்தை மிக மிக ரகசியமாக வைத்துள்ளது தசாவதாரம் யூனிட்.
|