அறிவையும் மனத்தையும் பாதிக்கும் 'இந்திரவிழா' : இயக்குனர் ராஜேஷ்வர்
- 10.05.2008
By Amalan
'அவள் அப்படித்தான்', 'கடலோரக்கவிதைகள்', 'மீண்டும் ஒரு காதல் கதை' போன்ற தமிழ்ப்படங்களுக்கும், இந்தியில் ராஜ்குமார் சந்தோஷியின் பல படங்களுக்கும் கதை, திரைக்கதைகள் எழுதியவர் கே.ராஜேஷ்வர்.
|
|
|
'இதயத்தாமரை', 'சீவலப்பேரி பாண்டி', 'அமரன்', 'கோவில்பட்டி வீரலட்சுமி', 'துறைமுகம்' போன்ற படங்களையும் இயக்கியுள்ள ராஜேஷ்வர் ஆங்க் மூவிஸ் தயாரிப்பில் இயக்கும் படம் 'இந்திரவிழா'.
'இந்திரவிழா' என்பது மகிழ்ச்சி, உற்சாகம், உல்லாசம் சார்ந்த குறியீடாகப் பார்ககப்படுகிறது. இன்றைய சமூகத்தில் மேல்தட்டு மக்களிடம் நடைபெறும் பாலியல் சார்ந்த பிரச்சனைகளை உறவுச்சிக்கல்களை சொல்கிற படம் இது.
ஸ்ரீகாந்த், நாசர், நமீதா, விவேக், ரகசியா, புதுமுகம் ஹேமமாலினி, ராதாரவி ஆகியோர் நடிக்கின்றனர். பாத்திரப் பொருத்தம் கருதியே இவர்களை தேர்வு செய்துள்ளேன்.
இதுவரை கவர்ச்சி கன்னியாக இருந்த நமீதா, 'இந்திரவிழா'வுக்குப் பின் சிறந்த நடிகையாக பேசப்படுவார். சந்தோஷ் சீனிவாசனாக ஸ்ரீகாந்த், காமினியாக நமீதா, சாவித்திரியாக ஹேமமாலினி, ஒப்பிலாமணி வேடத்தில் விவேக் ஆகியோரும் தங்களின் நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றனர். நகரமும், பெருநகரமும் சார்ந்த இந்தக் கதை ஓராண்டிற்குள் நடைபெறுவதுபோல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மலேசியா, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
இன்றைய சினிமா புலன்களுக்கு தேர்ச்சியூட்டும் அம்சமாக மட்டுமே இருக்கிறது. புலன்களைத் தாண்டி அறிவையும், மனத்தையும் பாதிக்கும் சினிமாவாக 'இந்திரவிழா' இருக்கும் என்கிறர் இயக்குனர் கே.ராஜேஷ்வர்.
|