மர்மயோகியில் ஸ்ரேயா?
- 10.09.2008
By JBR
யோகக்காரன் இந்த மர்மயோகி. த்ரிஷா, ஸ்ரேயா என்று யோகிக்கு ஜோடி இரண்டாம்.
|
|
|
சரித்திர கதையான மர்மயோகியை பிரமிட் சாய்மீரா தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, இயக்கம் கமல்ஹாசன். மர்மயோகியும் அவரே.
பிரதான வேடத்தில் ஹேமமாலினி நடிக்கிறார். வையாபுரியும் உண்டு. அதிநவீன காமிரா பயன்படுத்தப்படுகிறது.
மர்மயோகி குறித்த நம்பத்தகுந்த செய்திகள் கைப்பிடி அளவு. வதந்தி கடல் அளவு. கஜோல், பத்மப்ரியா ஆகியோரிடம் கதை சொன்ன கமல் இறுதியில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது, கடலில் ஒரு துளி இன்னொரு துளி வதந்திதான் இந்த செய்தியின் தலைப்பு.
மர்மயோகிக்கு த்ரிஷாவின் கால்ஷீட் வாங்கிய கமல் ஸ்ரேயாவிடமும் கால்ஷீட் வாங்கியிருக்கிறாராம். மேலும் பல ஹீரோயின்களையும் படத்தில் நடிக்க வைக்கப் போகிறாராம்.
இந்த செய்தியை ஸ்ரேயாவோ, தயாரிப்பாளர் தரப்போ இன்னும் உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்பே த்ரிஷா, ஸ்ரேயா மர்மயோகியில் நடிப்பதும் நடிக்காததும் தெரியவரும்.
|