இன்று அவரது நிலைமை அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. அதிமுக மேடைகளில் நேரத்தை கடத்தும் பேச்சாளரின் பணியைதான் செய்து கொண்டிருக்கிறார். அரசியலில் அந்தரத்தில் ஊசலாடிக் கொண்டிருப்பவருக்கு மீண்டும் படத்தில் நடிக்க தீராத ஆசை. ஆசையை நிறைவேற்ற முன் வந்துள்ளது கலைமகள் கலைக்கூடம்.
ஆம். நீண்ட இடைவெளிக்குப்பிறகு படத்தில் நடிக்கிறார் ராமராஜன். கலைமகள் கலைக்கூடம் படத்தை தயாரிக்கிறது. என்.டி.ஜி.சரவணன் படத்தை இயக்குகிறார். முன்பு ராமராஜன் படமென்றால் கண்டிப்பாக கவுண்டமணியும், செந்திலும் இருப்பார்கள். காலம் மாறிவிட்டது. கவுண்டமணியும். செந்திலும் பீல்டுலேயே இல்லை.
அதற்காக காமெடி இல்லாமல் படமெடுக்க முடியாதே. அதனால் இன்றைய தேதியில் கவுண்டரின் இடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தயாரிப்பாளர், காமெடியன் கிடைத்த அளவுக்கு ஹீரோயின் கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ராமராஜன் என்றதும் நடிகைகள் தலைதெறிக்க ஓடுகிறார்களாம்.
இதனால் புதுமுகம் யாராவது சிக்குவார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். படத்துக்கு 'மேதை' என்று பெயர் வைத்துள்ளனர்.
|