தயாரிப்பாளராகிறார் ரம்யாகிருஷ்ணன்
- 11.07.2007
By JBR
திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் முதல் படம் 'ஒரே கடல்.' மம்முட்டி, மீரா ஜாஸ்மின் உடன் நடிக்கிறார்கள்.
|
|
|
நடிப்பைவிட தயாரிப்பில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார் இவர். இதற்காக தனது மகன் ரித்வி பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ரம்யா கிருஷ்ணன் தொடங்கி உள்ளார்.
ரித்வி ட்ரீம் விஷுவல்ஸ் என்ற அந்த நிறுவனம் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்பதில் கவனம் செலுத்தும். முதலாவதாக ஜெமினி தொலைக்காட்சியில் ஸ்டார் நிகழ்ச்சி ஒன்றை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இதில் வாரம் ஒரு நட்சத்திரம் இடம் பெறுவார்.
படிப்படியாக தனது நிறுவனம் மூலம் தமிழிலும் நிகழ்ச்சிகளை தயாரிக்க உள்ளார் ரம்யா கிருஷ்ணன். சினிமாவில் கிடைத்த பிரபலம் தொலைக்காட்சியிலும் தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது என்றவர், இனி நிகழ்ச்சி தயாரிப்பில் முழுகவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார்.
சின்னத்திரையில் இன்னொரு ராதிகாவாக நீலாம்பரியும் உயர வாழ்த்துக்கள்!
|