முதல்வர் தலைமையில் நேற்று சுப முகூர்த்தத்தை முடித்த கையோடு புத்தம்புது ஜோடியாய் மீடியக்களை இன்று சந்தித்தனர் மணமக்கள்.
பாதுகாப்பு காரணத்திற்காக பத்திரிகையாளர்களை கல்யாணத்திற்கு அழைக்கமுடியவில்லை என்று காரணம் சொல்லி சமாளித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார், மகனையும் மருமகளையும் பேச அழைத்தார் . பத்திரிகையாளர்களை பார்த்து கையெடுத்துகும்பிட்ட சூர்யா, முழங்கையால் ஜோவின் காலை இடித்து அவரையும் கும்பிடுபோட வைத்தார்
கல்யாண ஆல்பம் போல எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் திருமண படங்களை வெளிட்டதற்காக நன்றி கூறி சூர்யா முடிப்பதற்குள் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தனர் நிருபர்கள்.
ஜோதிகா இனி படங்களில் நடிப்பாரா? இதுதான் கேள்வி. "இப்போதைக்கு நடிக்கமாட்டார்" ஜோதிகா சார்பில் பதில் சொன்ன சூர்யா தேனிலவுக்கு ஐரோப்பா சொல்லவிருப்பதாகவும், அப்பா வீட்டில் கூட்டுக்குடும்பமாக வாழப்போவதாகவும் தனிக்குடித்தனம் போகும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
|