'கூடல் நகர்' - ஒரு வெள்ளந்தி காதல்!
- 11.08.2006
By JBR
இதோ அதோ என்று இழுத்துக்கொண்டிருந்த 'கூடல் நகர்' படத்தை சத்தமில்லாமல் ஆரம்பித்து சைலண்டாக படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார் அறிமுக இயக்குனர் சீனு ராமசாமி. 'கூடல் நகர்' என்று அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கும் சீனு ராமசாமி இலக்கிய பரிட்சயம் உடைய ஒன்றிரண்டு கோலிவுட் இயக்குனர்களில் ஒருவர். பாலுமகேந்திரா, சீமான் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த சீனு ராமசாமியை சந்தித்தோம்.
|
|
|
'கூடல் நகர்' கதை என்ன?
"கிராமத்தில் ரொம்ப தூய்மையான கேரக்டரை வெள்ளெந்தினு சொல்வாங்க. அப்படியொரு வெள்ளெந்தியான கேரக்டர்தான் என் படத்தோட நாயகன். அதே நேரம் தண்ணி, தீ என்கிற இரண்டு எதிரெதிர் குணங்களும் இவனிடம் உண்டு."
அதனால்தான் பாவனா, சந்தியா என்று இரண்டு ஹீரோயினா?
"இதுக்கு பதில் சொன்னா மொத்த கதையும் சொல்ல வேண்டியிருக்கும். சந்தியாவை நான் செலக்ட் பண்ணுனப்போ அவங்க நடிச்ச 'காதல்' படம் ரிலீஸாகவேயில்லை. அப்போதே இவங்கதான் ஹீரோயின்னு தீர்மானிச்சேன். அதுபோலதான் பாவனாவும், பரத்தும்!"
இந்த மூன்று பேர்களுடன் 'பிதாமகன்' மகாதேவன், இளவரசு ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கியமான வேடம் ஒன்றில் ரோகிணி நடிக்கிறார். நடிகை இந்துவுக்கு பரத்தின் அம்மா வேடம்.
பழனிபாரதி, நா. முத்துக்குமார், நந்தலாலா ஆகியோர் சீனு ராமசாமியின் இலக்கிய நண்பர்களில் முக்கியமானவர்கள். ஆகவே, படத்திற்கு பாடல்களும் இவர்களே எழுதுகிறார்கள். கவிஞர் தேன்மொழியும் பாடல் எழுதுகிறார். சபேஷ்-முரளி இசையில் நான்கு பாடல்களின் கம்போஸிங் முடிந்துவிட்டன.
|