சுனாமி சுருட்டிக்கொண்டு போனது ஜனங்களின் உயிரையும், உடமைகளையும் மட்டுமல்ல, மக்களின் சுகாதாரமான வாழ்வையும்தான். இதனை சீர் செய்ய இன்னமும் முயன்று கொண்டிருக்கின்றன தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். அப்படியொரு அர்ப்பணிப்புடைய நிறுவனம்தான் கருணாலயா!
இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருவொற்றியூர் பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இலவச கழிப்பறைகள் கட்டிக் கொடுத்துள்ளனர். இதற்கான விழாவில் கலந்து கொள்ள (பைசா வாங்காமல்) வந்திருந்தார் நமிதா. அவரை கண்டதும் தேரை கண்ட திருவிழா கூட்டமாக நமிதாவை சூழந்து கொண்டனர் அப்பகுதி மக்கள்.
இரண்டு நாள் முன்புதான் பத்திரிகையாளர்கள் நமிதாவை ரவுண்ட் கட்ட, பயத்தில் மாரத்தான் ரேஸ் விட்டார் நமிதா. இவையெல்லாம் அவர் மனதில் ரொம்பவே பீதியை கிளப்பியிருக்கிறது. தெரிந்த நிருபர்களிடம் எல்லாம் இது குறித்து புலம்பி வருகிறார். "நானும் சாதாரண பொண்ணுதான். தனியா ஷாப்பிங் போகணும், காபி ஷாப்பில் காபி சாப்பிடணும், அவசரத்துக்கு ஆட்டோவுல போகணும்னு எல்லாம் ஆசையிருக்கு. நடிகையா இருக்கிறதால இது எதுவும் முடியலை. ப்ளீஸ் என்னை விட்டுடுங்க" என்று கையெடுத்து கும்பிடுகிறார்.
கேட்க பாவமாக இருந்தாலும் நமிதா பற்றிய செய்திகளை நாட்டுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது அதைவிட பாவம் அல்லவா!
|