பூமிகா, ப்ருதிவிராஜ் நடிக்கும் 'மா' படத்தை தற்போது இயக்கி வருகிறார் சபாபதி. அம்மாசென்டிமெண்டை அடிப்படையாக்க கொண்டு இந்தப் படத்தை இயக்கி வருகிறவர் 'அ ஆ இ ஈ' படத்தையும் இன்னொரு பக்கம் இயக்கி வருகிறார். இந்த இரு படங்களும் முடியாத நிலையில் அவர் ஒப்புக்கொண்டிருக்கும் இன்னொரு படம் '16'. ஆம் பதினாறேதான்.
படத்தின் கதைக்கும் பெயருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. பதினாறு வயது என்பது டீன் ஏஜ் பருவம். காதல் அரும்பும் வயது. ஒருவரின் கேரியர் எப்படி அமையப்போகிறது என்பதை தீரமானிக்கும் வயது. இத்தனை முக்கியம் வாய்ந்த இந்த வயதினரைப் பற்றிய படம்தான் '16'.
'சென்னை 28'-ல் நடித்த சிவா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மது ஷாலினி என்ற புதுமுகம் நாயகி. சபாபதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா படத்துக்கு இசை. அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதுகிறார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
|