சென்னை நகரவாசிகளுக்கு இன்று இசை விருந்து காத்திருக்கிறது. அவ்வப்போது சென்னையில் இசை நிகழ்ச்சி நடைபெறுவதுண்டு. தனியார்கள் நடத்தும் இந்த இசை விழாக்களில் பிரபல இசையமைப்பாளர்கள். பாடகர்கள் கலந்து கொள்வது சாதாரணமாக நடைபெறும் நிகழ்வு.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தாலும் இன்றைய நிகழ்ச்சிக்கு தனிமுக்கியத்துவம் உண்டு.
சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இன்றைய இசை நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த படங்களின் பாடல்களை மட்டும் பாடுகிறார் எஸ்.பி.பி. அவருடன் இணைந்து பாடுகிறவர் எஸ்.பி.ஷைலஜா.
இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் பணம் விஎக்ஸ்எல் மன நலம் குன்றிய குழந்தைகள் பள்ளியின் வளர்ச்சிக்கு வழங்கப்படும். கேளிக்கையுடன் புண்ணியம் கிடைக்கும் நிகழ்ச்சி. ஆகவே தவற விடாதீர்கள்.
|