'காதலில் விழுந்தேன்' வெற்றியால் இவரது மார்க்கெட் கண்டபடி எகிறியிருக்கிறது. அஜித்தை வைத்து இயக்கும் படத்திற்குப் பிறகுதான் இயக்கும் படத்தில் நடிக்க நகுலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர் கவுதம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர்கள் நகுல் கேட்கும் பணத்தை தர தயாராக உள்ளனர்.
ஏற்கனவே படம் தயாரித்து கையை சுட்டுக் கொண்ட நகுலின் அக்கா நடிகை தேவயானியும் தம்பியை வைத்து படம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். 'காதலில் விழுந்தேன்' படத்தை தனது கணவர் ராஜகுமாரன் சகிதம் சென்னை கமலா திரையரங்கில் பார்த்த தேவயானி படம் வெற்றிபெற சிறப்பு பூஜையும் செய்திருக்கிறார்.
தற்போது ராஜகுமாரன் இயக்கும் படத்தை தேவயானி தயாரித்து வருகிறார். இதில் ராஜகுமாரனே நாயகனாகவும் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு நகுல் நடிக்கும் படத்தை தேவயானி தயாரிக்க, ராஜகுமாரன் இயக்கலாம் என்கிறார்கள்.
இது நடைமுறைக்கு வருமா என்பது நகுலின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
|