ஷாம் என்றதும் ஷேவ் செய்த முகமும் மீசையில்லாத அழகுமாக மொழுமொழு அமுல்பேபி இமேஜூக்கு 'சிவமய'த்தில் குட்பை சொல்கிறார் ஷாம்.
சஞ்சய் ராம் தயாரித்து இயக்கும் 'சிவமயம்' படத்தில் ஷாம், பிரகாஷாராஜ் நடிக்கின்றனர். ஆக்ஷ்ன் படமான இதில் ஷாமிற்கு ஜோடி ஸ்ரீதேவிகா.
இதில் மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார் ஷாம். என்னென்ன கெட்டப்புகள் என்பதை மற்ற இயக்குனர்களைப் போல் ரகசிய நோயாக மூடிமறைக்காமல், ஓபனாக விளக்குகிறார் சஞ்சய் ராம்.
அடர்த்தியான மீசையுடன் ஒரு கெட்டப், 'நந்தா' படத்தில் வரும் சூர்யாபோல ஒட்ட வெட்டிய முடியுடன் இன்னொன்று, மூன்றாவது வழக்கமான அமுல்பேபி.
'சிவமயம்' வெளிவந்தால் எல்லாம் ஷாம் மயம் ஆகிவிடும் என பில்டப் ஏற்றுகிறார் சஞ்சய்ராம்.
சஞ்சய்ராமின் வார்த்தை சத்தியமாகட்டும்!
|