விஜய்யை வைத்து ஒருபடம் இயக்க நினைத்தார் கவுதம். கதையை கேட்ட விஜய், சிவகாசி ரேஞ்சுக்கு கதையை திருத்தச்சொன்னதால், தனது ஆசையை திருத்திக் கொண்டார் கவுதம்.
ராடன் நிறுவனம் தயாரிப்பில் சரத்குமாரை இயக்குவதாகவும் ஒரு திட்டம் இருந்தது. அதுவும் கைவிடப்பட்டுவிட்டது. அப்படியானால், 'வாரணம் ஆயிரம்' முடிந்த பிறகு என்னதான் செய்யப்போகிறார் கவுதம்
த்ரிஷாவை வைத்து தொடங்கிய 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை முடிக்க இருக்கிறார். பிறகு, தெலுங்கில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இய்ககுகிறார். படம் வெற்றிபெற்றால் அதன் ரீ-மேக்கில் விஜய் நடிப்பார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை யு டி.வி தயாரிக்கிறது. ஏற்கனவே 'காக்க...காக்க' படத்தை வெங்கடேஷை வைத்து தெலுங்கில் இயக்கினார் கவுதம். 'கர்ஜனா' என்ற அந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் தோற்றுப் போனது. மகேஷ்பாபுவின் படம் கவுதமின் இரண்டாவது முயற்சி.
கண்டிப்பாக திருவினையாகும் என நம்பலாம்.
|