சிருஷ்டி நிறுவனம் சார்பில் ப.சணமுகம் 'பெருமாள்' படத்தை தயாரிக்கிறார். வின்சென்ட் செல்வா இயக்கும் 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் நடித்த மீனாட்சி சுந்தர் சி.க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், சீனியர் நடிகர்களின் தோழி, நமீதாவும் உண்டு. காமெடி விவேக், வில்லன் கோட்டா சீனிவாசராவ்.
ஸ்ரீகாந்த் தேவா பெருமாளுக்காக ரீ-மிக்ஸ் பாடலொன்றை போட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ரீ-மிக்ஸ் பாடல் இடம் பெறுவது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டாலும், 'பெருமாள்' ரீ-மிக்ஸிற்கு சிறப்பு உண்டு.
'சுவர் இல்லா சித்திரங்கள்' படத்தில் இடம் பெற்ற 'காதல் வைபோகமே...' பாடலின் ரீ-மிக்ஸை, எஸ்.ஜானகியுடன் பாடியவர், முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க.முத்துவின் மகனுமான டாக்டர்.அறிவுநிதி.
சில வாரங்கள் முன்புதான் தேவாவின் இசையில் 'மாட்டுத்தாவணி' படத்துக்காக பாடினார் மு.க.முத்து. இப்போது அவரது மகன், தேவாவின் மகனின் இசையில் பாடியிருக்கிறார்.
வாரிசுகளிடையே மோதல்தான் வெடிக்கும். முதன்முறையாக பாடல் மெட்டவிழ்ந்திருக்கிறது. தொடரட்டும் இந்தப் பணி.
|