சென்ற ஆண்டு பிலிவுட் நடிகர் ஷாருக்கானின் 'ஓம் சாந்தி ஓம்' கேன்ஸில் திரையிடப்பட்டதுடன், சிறப்பு அழைப்பாளராக ஷாருக் அழைக்கப்பட்டார்.
இந்த வருடம் அந்த கவுரவம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்திருக்கிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிவதற்கான உடைகளை ஸ்பெஷலாக வடிவமைத்திருப்பவர், விழா நடக்கும் நாட்கள் முழுவதும் கேன்ஸில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளாராம்.
பதினெட்டாம் தேதி 'பில்லா' திரையிடப்படுவதால் பிரான்ஸ் சென்றுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். இந்த திரையிடலின் போது அஜித்தும் அங்கிருப்பார்.
தயாரிப்பானர் பி.எல்.தேனப்பன் வியாபார விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த முறை கேன்ஸ் செல்வதாக தெரிவித்தார். சென்ற முறை டிவிடி ஸ்டால் வைத்த மோசர்பேரும் கேன்ஸ் படவிழாவை தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ள இருக்கிறது.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், சுஹாசினி, ரேவதி போன்றோர்களையும் கேன்சில் எதிர்பார்க்கலாம்!
|