இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிராஜாவும், ஆர்.சி.சக்தியும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். பாரதிராஜா அணியினர் போட்டியிலிருந்து விலகுமாறு தன்னை மிரட்டியதாக ஆர்.சி.சக்தி சங்க தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறியிருந்தார்.
பிரபல இயக்குனர்களின் நடவடிக்கையால் மனம் கசந்த சங்கத்தைச் சேர்ந்த உதவி இயக்குனர்கள், நாளைய இயக்குனர்கள் அணி என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு, தேர்தல் நடக்கயிருந்த வடபழனி கலை இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் செல்வமணி, ஸ்டேன்லி உள்ளிட்ட பாரதிராஜா அணி இய்ககுனர்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர், இயக்குனர் வேல்முருகனை தாக்கியதாக தெரிகிறது. தாக்கியவர்கள் நடிகர் ஜி.கே.ரித்தீஷின் ஆட்கள் என ஆர்.கே.செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அடிதடி குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சங்க தேர்தல் அதிகாரியிடமும் இய்ககுனர்கள் புகார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து பாரதிராஜாவும், ஆர்.சி.சக்தியும் தனித்தனியாக எதிராளிகளை கண்டித்துள்ளனர்.
தேர்தல் தள்ளி வைப்பு இயக்குனர்களின் ஒற்றுமையில் மாறாத வடுவை ஏற்படுத்தியிருப்பதை ஒப்புக் கொண்டாகவேண்டும்!
|