எஸ்.ஏ. சந்திரசேகரன் 'சித்திரம் பேசுதடி' நரேனை வைத்து படம் இயக்குகிறார். 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்' என்பது படத்தின் பெயர். நரேனின் நெஞ்சாங்கூட்டில் நிற்க எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்வு செய்தது பூஜாவை. இப்போது என்ன நினைத்தாரோ, நெஞ்சாங்கூட்டிலிருந்து பூஜாவை பேக்கப் செய்துவிட்டு அந்த இடத்தில் ஆந்திராவின் பூனம் கவுரை அப்பாயின்ட்மெண்ட் செய்திருக்கிறார். பூஜாவை ரீபிளேஸ் செய்த இந்த பூனம் கவுர் சென்ற வருடம் மிஸ். ஆந்திராவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது கூடுதல் செய்தி.
மலையாளத்தில் 'டான்' என்ற பெயரில் தயாராகி வருகிறது ஒரு படம். திலீப் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பூஜா. படம் தொடங்கிற நாள்.... நாயகன் உள்பட அனைவரும் மேக்கப்புடன் தயாராக இருக்க, பூஜா மட்டும் மிஸ்ஸிங். போன் போட்டு கேட்டபோது இலங்கையில் இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டை இலங்கைக்கு மாற்ற முடியாது என்பதால் பூஜாவை மாற்றியிருக்கிறார்கள். இப்போது 'டான்' படத்தில் திலீப்புக்கு ஜோடியாக நடிப்பவர் கோபிகா.
குளறுபடிகள் செய்யாத பூஜா இந்த குறுகிய காலத்தில் இரண்டு படங்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். கல்யாண ஆசை வந்தால்தான் நடிகைகள் இப்படி காணாமல் போவார்கள்.
பூஜாவுக்கு என்ன ஆச்சு?
|