துப்பாக்கி ஏந்தும் மும்தாஜ்!
- 12.08.2006
By JBR
கட்டிப்புடி கட்டிப்புடிடா மும்தாஜை தானே உங்களுக்கு தெரியும். இதோ வரப்போகிறார் 'கன்' பைட் மும்தாஜ்! ஆம், கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்த மும்தாஜ் துப்பாக்கி ஏந்தி எதிரிகளை துவசம் செய்கிறார்.
|
|
|
புதிய படமொன்றில் மும்தாஜ் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதுவொரு வித்தியாசமான வேடம். இதுவரை இவர் நடித்திராத என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் கதாபாத்திரம்.
தாதாக்களை துப்பாக்கியால் போட்டுத்தள்ளும் கேரக்டர் என்பதால் கடுமையான பயிற்சி எடுத்து வருகிறார் மும்தாஜ். இதற்காக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி, அங்குள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கியின் சூட்சுமங்களை கற்றுவருகிறார். பிரத்யேக ட்ரெயினர் ஒருவர் மும்தாஜுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மும்தாஜுக்கு துப்பாக்கியை எப்படி பிடிப்பது, எப்படி சுடுவது என்பனவற்றை கற்றுத்தருகிறார்.
இதே போன்றதொரு கேரக்டரில் விந்தியாவும் நடிக்கிறார். இது எஸ்.ஏ. சந்திரேசகரன் இயக்கும் 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்' படம். இதில் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் விந்தியா.
இவருக்கு கராத்தே, களரி, குஸ்தி, சிலம்பம் என அகடவிகடம் அறுபத்து நான்கும் தெரிந்தாலும் துப்பாக்கி பிடித்த அனுபவம் இல்லை. இதனால் நல்ல கன் ட்ரெயினராக தேடிக்கொண்டிருக்கிறார் விந்தியா. அதற்குள் மும்தாஜ் முந்திக்கொண்டதால், ஏ.கே. 47 யாரிடமாவது இருக்கா, பயிற்சி எடுக்கணும் என துடியாய் துடிக்கிறார்.
கவர்ச்சி நடிகைகள் எல்லாம் இப்படி கன் பைட்டர்களாக மாறினால், ரசிகர்கள் கதி என்னாவது?
|