இந்த இருவரும் படம் பார்த்து விட்டு மிஷ்கினை பாராட்டியதுடன், தங்களுக்கும் படம் பண்ணித்தர வேண்டுமென கேட்டிருந்தனர். மிஷ்கினும் இரண்டு கதைகளை தயார் செய்து திரைக்கதை அமைத்து வருவதாக செய்திகள் வெளியானது.
மிஷ்கின் ஒருமுறை பேட்டியளிக்கையில், குழந்தைகளை வைத்து படமெடுக்கப் போவதாக குறிப்பிட்டார். இதனால் இவர் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்பது குழப்பமாகவும், எதிர்பார்ப்பை அதிகரிப்பதாகவும் இருந்தது.
இறுதியில் வெளியான தகவல்களின்படி, தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் ஸ்ரீ சூர்யா பிலிம்சுக்கு படம் பண்ண ஒப்புக்கொண்டிருக்கிறார் மிஷ்கின். ஹீரோ விக்ரமோ, விஜய்யோ அல்ல. ஏ.எம். ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா!
'சித்திரம் பேசுதடி'யில் சிறப்பாக இசையமைத்த சுந்தர் சி. பாபுவை தனது புதிய படத்தில் தவிர்த்திருக்கிறார் மிஷ்கின். அவருக்கு பதில் இசையமைப்பவர் இளையராஜா. வாளமீன் பாடல்தான் 'சித்திரம் பேசுதடி' படத்தை வெகுஜனங்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியிருக்க அவரை தவிர்த்தது ஏன்?
காரணம், இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகராம் மிஷ்கின். தனது புதிய படத்திற்கு இளையராஜாவின் இசையே ஆப்டாக இருக்கும் என அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், 'சித்திரம் பேசுதடி'யில் வேலைப் பார்த்த உதவி இயக்குனர்களை துரத்திவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
படமும் ப்ரெஷ்ஷாக இருந்தால் நல்லது!
|