கமலின் புதிய படம் 'தலைவன் இருக்கிறான்'
- 12.11.2008
By Amalan
'மர்மயோகி' படம் இடையிலேயே நின்றுபோனதை தொடர்ந்து வேறு படமொன்றை இயக்க தயாராகிவிட்டார் கமல்.
|
|
|
நூறுகோடி ரூபாய் பட்ஜெட், ஹாலிவுட் டெக்னீசியன்கள், மெகா ஸ்டார்கள் என பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட மர்மயோகி படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கமலு்க்கு மட்டுமல்லாது ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிய படமொன்றை இயக்குகிறார் கமல். 'தலைவன் இருக்கிறான்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
தமிழில் கமல், இந்தியில் ரிஷி கபூர், தெலுங்கில் வெங்கடேஷ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கின்றனர். 'மர்மயோகி'யில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ரேயா, த்ரிஷா இருவரில் த்ரிஷா மட்டும் 'தலைவன் இருக்கிறான்' படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளி்ல் படமாக்கப்படவுள்ளதாம். ஆக்ஷ்ன்-காமெடி கலந்த கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கப்படவுள்ளதாம்.
|