செல்வராகவனின் புதிய படமான ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து நீக்கப்பட்டு ஜீ.வி.பிரகாஷ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யுவன் போட்ட இரண்டு டியூன்களும் படத்திலிருந்து நீ்க்கப்பட்டுவிட்டன.
பிரச்சனைகளுக்கு நடுவிலும் பிரமாதமாக வளர்ந்து வருகிறதாம் படம். நடிகர் பார்த்திபன் இதில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளது.
பார்த்திபனுக்கு எப்படி வித்தியாசமான வேடமோ, அதே போல் கெட்டப்பும் வித்தியாசாமாக இருக்குமாம். சென்றவாரம், பார்த்திபனை வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக நீண்ட தலைமுடி வளர்ப்பதாகவும் கூறுகிறார்கள்.
கொஞ்ச நேரமே வந்தாலும் நெஞ்சில் நிற்கும் கேரக்டர் என்பதால் கேட்ட உடனேயே கால்ஷீட் கொடுத்துள்ளார் பார்த்திபன்.
|