உதவி இயக்குனர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
- 13.05.2008
By JBR
எங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இயக்குனர்கள் முயல்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர் உதவி இயக்குனர்கள்.
|
|
|
இயக்குனர்கள் சங்க தேர்தலில் பாரதிராஜா, ஆர்.சி.சக்தி அணியுடன் உதவி இயக்குனர்களின் நாளைய இயக்குனர்கள் அணியும் போட்டியிடுகிறது. இயக்குனர் வேல் முருகன் தாகக்ப்பட்டதை தொடர்ந்து கடந்த ஞாயிறு நடத்தப்படுவதாக இருந்த சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நாளைய இயக்குனர்கள் அணியை சேர்ந்தவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் இயக்குனர்களை குறை கூறியிருப்பவர்கள், நாளைய இயக்குனர்கள் அணி தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்காக, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து உதவி இயக்குனர்களை நிரந்தரமாக நீக்குவதற்கு இயக்குனர்கள் முயன்று வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று மாலை இயக்குனர்கள், உதவி இயக்குனர்களை சமரசப்படுத்தும் முயற்சி ஷோபா திருமண மண்டபத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பல மணிநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இயக்குனர் சங்க தேர்தல் மேலும் சிக்கலடைந்துள்ளது.
|