கடைசியாக வெளியான விஜயகாந்த் படங்கள் எதுவும் சொல்லும்படி இல்லை. அத்தனையும் தோல்விப் படங்கள். கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு ஹிட் கூட கொடுக்காத நிலையில் தொடங்கப்பட்டதுதான் விஜயகாந்தின் நூற்றி ஐம்பதாவது படமான 'அரசாங்கம்'. மாதேஷ் இயக்கம். நவ்நீத், ஷெரில் பிரிண்டோ என இரு நாயகிகள்.
வழக்கமான கள்ளன் போலீஸ் கதையென்றாலும் விறுவிறுப்பான திரைக்கதை அரசாங்கத்தை வெற்றிப்படமாக்கியுள்ளது.
இந்த வெற்றி விஜயகாந்திற்கு ஏற்கனவே தெரியும் போல. விஜயகாந்தின் புதிய படம் எங்கள் ஆசானின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் நடந்து வருகிறது. 'அரசாங்கம்' வெளியான மே ஒன்பதாம் தேதி 'எங்கள் ஆசான்' யூனி்ட்டிற்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் விஜயகாந்த்.
'அரசாங்கம்' வெற்றியின் மூலம் நூறாவது மற்றும் நூற்றுஐம்பதாவது படங்களை வெற்றிப்படமாக்கிய ஒரே தமிழ் நடிகர் என்ற பெருமையும் விஜயகாந்தை வந்து சேர்ந்துள்ளது.
|