இந்நிறுவனம் அமெரிக்காவில் உருவான 'தி பார்பிடன் கிங்டம்' என்ற படத்தை அடுத்த மாதம் தமிழகத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட உள்ளார்கள்.
முதன் முறையாக ஜாக்கிசானும் ஜெட்லியும் இணைந்து நடித்து கலக்கியுள்ளார்கள். அரசாங்கத்தை கைப்பற்றி அராஜகம் புரியும் அக்கிரமக்காரர்களை அடித்து துவம்சம் செய்து எப்படி மீட்கிறார்கள் என்பதே கதை. அமெரிக்க சீன நாடுகளின் வசூல் மழை பெய்த இந்தப்படம் தமிழகத்திலும் ஒரு கை பார்க்க வருகிறது.
இதுவரை சீன மொழியில் மட்டுமே இணைந்து நடித்து வந்த ஜாக்கிசானும், ஜெட்லியும் முதன் முறையாக ஆங்கிலப்படமான 'தி பார்பிடன் கிங்டம்' படத்தில் சேர்ந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆக்ஷ்ன் புலிகள் கைகோர்த்துள்ள இப்படத்தில் சண்டைக்காட்சிகளில் அனல் பறக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ?
|