ஷக்தி சிதம்பரம் சொந்தமாக தயாரித்து இயக்கும் இப்படத்தில் நாயகி வேஷம் கட்டும் நமிதா இம்முறை ஜோடி சேர்வது சத்யராஜூடன் அல்ல; சிபிராஜூடன்.
படத்தின் பூஜை ஏவிஎம். ஸ்டுடியோவில் நேற்று நடந்தது. அடைமழையில் நனைந்தபடி உள்ளே போன நமக்கு உடனடி சூடு ஏறியது. காரணம் நமிதா. ஆரஞ்சு வண்ண பனியன், இடை தெரியும் அளவிற்கு இறக்கிப் போடப்பட்ட ஜீன்ஸில் காந்தம்போல் இழுத்தது நமியின் கவர்ச்சி.
பூஜைக்கு வந்திருந்த அனைவரும் குத்துவிளக்கேற்றி படத்தை துவக்கி வைத்தனர். இந்த விஐபிகளில் சத்யராஜின் மனைவியும் அடக்கம்.
பின்னர் நாயகர்களுக்கும் நாயகிக்கும் பூங்கொத்து கொடுத்து இயக்குனர் வாழ்த்த, தந்தை - மகன்களுக்கிடையே நின்று போஸ்கொடுத்தார் நமி. போதாக்குறைக்கு ஸோலோவாக நின்று புகைப்படக்காரர்களின் காமிராக்களுக்கும் தீனி போட்டார்.
அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டில் சானியா மிர்சாவை போல போஸ் கொடுத்துக் கொண்டிருந்த நமிதாவின் ஸ்டில்லை பார்த்த சத்யராஜ், 'நம்மூர் சானியாவும் சூப்பராத்தான் இருக்காங்க...' என கமெண்ட் அடிக்க, வெட்கத்தில் பூத்தது நமியின் முகம்.
|