சினிமா நட்பு வட்டாரங்கள் நிமிடத்திற்கொருமுறை போனில் வாழ்த்துச் சொல்ல, செம பிஸிகளுக்கிடையில் நிருபர்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கிய புன்னகை இளவரசி, திருவாய் மலர்ந்த தருணங்களில்....
"கடந்த வருடம் எனக்கு சிறப்பாகவே அமைந்தது. தற்போது ஒன்பது படங்கள் என் கைவசம் உள்ளது. பிறந்தநாளையொட்டி காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று இந்த வருடமாவது தேசிய விருது வாய்ப்புள்ள படங்கள் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டேன். அம்பாள் அருள்புரிவார் என்று நம்புகிறேன் என" கண்களை மூடி ஒரு நொடி தியாணிக்க, அடுத்த கேள்வி அவரது தியானத்தை கலைத்தது.
ஹீரோயின்கள் ரேஸில் உங்களுக்கு இப்போது எந்த இடம்?
"நம்பர் ஒன், நம்பர் டூ பட்டியல்களில் எனக்கு உடன்பாடில்லை. ஓவர் கிளாமரும் ஓவர் சம்பளமும் வாங்குபவர்கள்தான் நம்பர் ஒன் நடிகை என்ற கணக்குதான் இப்போது இருக்கிறது. இந்த கணக்கு எனக்கு பிடி்ககாது. சம்பளம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக ஒரே ஒரு குத்துப்பாடலில் ஆடும் போக்கிலும் எனக்கு உடன்பாடில்லை" என தனது கொள்கையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துகிறார்.
போலீஸ் வேடமெல்லாம் போடப்போறீங்கபோல?
"விஜயசாந்தி நடித்த 'வைஜெயந்தி ஐபிஎஸ்' - ரீ-மேக்கில் நடிப்பது உண்மைதான். ஆனால் அந்த படத்தின் கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனது கேரியரில் இன்னொரு மாற்றமாக இந்தப் படம் இருக்கும். இதற்காக சண்டைப்பயிற்சிகளையும் எடுக்கவுள்ளேன்" என்றபடி கண்களை சிமிட்ட தீபாவளி வந்துவிட்டதை நினைவு படுத்தியது அவரது மத்தாப்பு புன்னகை.
|