Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஜீ தொலைக்காட்சி இப்போது தமிழில்
- 13.10.2008

By Amalan
தமிழ் தொலைக்காட்சி நேயர்களின் கண்களில் தொற்றிக்கொள்ள இன்னொரு தொலைக்காட்சியும் வந்துவிட்டது. இந்தியாவில் பல மொழிகளில் முன்னணி ஊடகமாக திகழும் Zee TV இபபோது தமிழிலும் சேவையாற்ற வந்துள்ளது.

Jay, Swathy, Sasi kumar

நேற்றுமுதல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள இத்தொலைக்காட்சியின் தொடக்கவிழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஜீ எண்டர்டெய்மெண்ட் என்டர்பிரைசஸ் நிறுவன தலைமை நிர்வாகி புனித் கோயங்கா, ஜீ குழுமத்தின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.ராம்பிரசாத், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் மூத்த துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஜீ தொலைக்காட்சி குழுமம், இன்று முதல் தமிழில் கால் பதிக்கிறது. மெகா தொடர்கள், கேம் ஷோக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய முழுமையான பொழுதுபோக்கு சேனலாக இது இருக்கும்.

இந்தியாவிலேயே முதல் தனியார் தொலைக்காட்சி சேவையை துவக்கிய பெருமை ஜீ குழுமத்திற்கு உண்டு. 1992-ம் ஆண்டு சுபாஷ் சந்திராவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், படிப்படியாக வளர்ச்சி பெற்று தற்போது 30க்கும் மேற்பட்ட சேனல்களை கொண்ட  நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

Punit Koyenga, G.Ramprasath, Chandrasekar

1998-ம் ஆண்டு அமெரிக்காவிலும் ஒளிபரப்பை தொடங்கிய ஜீ தொலைக்காட்சி நிறுவனம், இந்தியாவின் வடமாநிலங்களில் இந்தி, மராத்தி, வங்காளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. தென்னிந்தியாவில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் முத்திரை பதித்து வரும் ஜீ டிவி, தற்போது தமிழிலும் வெற்றிகரமான பயணத்தை தொடங்கியிருக்கிறது.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், நடிகை குஷ்பு, பிரபு நேபால் உள்ளிட்ட பிரபலங்களின் மெகா தொடர்கள், விறுவிறுப்பான டாக் ஷோக்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் எதிர்பார்ப்பபகளையும் பூர்த்தி செய்யும் புத்தம் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் நடுநிலையான செய்திகளுடன் ஜீ, தமிழ் தொலைக்காட்சி வானில் தன் சிறகை விரிக்கிறது.

ஜீயின் பிற மொழி சானல்களில் முத்திரை நிகழ்ச்சியாக கலக்கி வரும் பிரபலமான சரிகமப இசை நிகழ்ச்சி, சங்கீத மகா யுத்தம் என்ற பெயரில் புதுமையான வடிவத்தில் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது" என்றனர்.

மற்ற சேனல்களைப்போல ஜீ நிறுவனத்திற்கும் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதாம். திரைக்கு வந்த 'அரசாங்கம்', 'சில நேரங்களில்', 'காலைப்பனி', 'சுப்ரமணியபுரம்' உள்ளிட்ட பல படங்களின் உரிமையையும் ஜீ வாங்கியுள்ளதாம்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us