நானொரு பொம்மை : ஜெய் ஆகாஷின் ஆதங்கம்
- 13.10.2008
By Amalan
"நான் நடிக்க வந்து ஒன்பது வருஷமாச்சு சார். ஆனா ரசிகர்களிடம் பெரிய அளவில் நான் ரீச் ஆகலை. எனக்கு அமைந்த படங்களும், இயக்குனர்களும் அப்படி. அதான் என்னை நானே உயர்த்திக் கொள்ள இயக்குனராகிட்டேன்" என ஆதங்கம் பொங்க பேசும் ஜெய் ஆகாஷ், இப்போது இயக்குனர்.
|
|
|
பிரஸ்டீஜ் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர்.இப்ராஹிம் பாஷா ரஃபத் மாலிக் தயாரிக்கும் 'காதலன் காதலி' படத்தை இயக்கி நடிக்கிறார் ஆகாஷ். அவரது காதலியாக நடிக்கும் டெய்ஸி போபண்ணா, நிதி சுப்பையா, சுஹாசினி ஆகிய மூன்றுமுகங்களும் புதுமுகங்கள்தான். இதில் நிதி சுப்பையா ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தில் நடித்த மாடலாம்.
மூன்று கதாநாயகிகள் இருப்பதால் முக்கோண காதல் பார்முலாதான் கதையா? என்றால், "அப்படியான பழைய பல்லவியெல்லாம் என்னோட கதையில் இல்லை. இது வேறொரு பரிமாணத்தில் இருக்கும். படம் சூப்பர்ஹிட் ஆகிறதோ இல்லையோ நிச்சயம் தோல்வியடையாது என்பதற்கு ஒரு இயக்குராக என்னால் கேரண்டி கொடுக்க முடியும்" என்னும் ஆகாஷின் பேச்சில் திடமான நம்பிக்கை.
இத்தனை வருடமா நடித்தும் திருப்பு முனை அமையாதது ஏன்?
ஒரு படம் வெற்றியாவதும், தோல்வியாவதும் கண்டிப்பாக இயக்குனர்கள் கையில்தான் இருக்கிறது. நடிகர்கள் ஒரு பொம்மை மாதிரிதான். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்யவேண்டும். நானும் பொம்மையாக இருந்ததால்தான் திருப்புமுனை ஏற்படவில்லை. அதான் நானே இப்போது களத்தில் இறங்கி விட்டேன்.
'ரோஜாவனம்' படத்தில் நடித்தபோதே தெலுங்கில் ஆனந்தம் படத்தை இயக்கிய இயக்குனரிடம் உதவிஇயக்குனராக வேலை செய்துள்ளேன் அந்த அனுபவத்தைக் கொண்டுதான் இப்போது இயக்குனராக அறிமுகமாகிறேன் என்கிறார்.
|