பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
- 14.05.2008
By JBR
சென்னையில் நடைபெறவுள்ள குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறையை இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கி வைக்கிறார்.
|
|
|
நிழல் இதழும், தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கமும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் பயிற்சிப் பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய நிழல் இதழின் ஆசிரியர், வக்கீல், ஆசிரியர், அரசு ஊழியர், மாணவர்கள் என பிற துறையில் இருப்பவர்களுக்கு சினிமா மீது ஆர்வம் இருக்கும். பணி காரணமாக அதை கட்டுப்படுத்தி வைத்திருப்பார்கள். இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து சினிமா குறித்து கற்றுக் கொள்ளவும் நேரமிருக்காது. வக்கீல்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இது கோடை விடுமுறை. சினிமா குறித்த பயிற்சி எடுத்துக் கொள்ள இது நல்ல சந்தர்ப்பம் என்றார்.
மே 25 முதல் 31 வரை ஏழு நாட்கள் சென்னையில் நடக்கும் பட்டறையில் நடிப்பு, இயக்கம், கேமரா, திரைக்கதை, எடிட்டிங், அனிமேஷன் ஆகியவை குறித்து சொல்லித்தரப்படும். பட்டறையை பாலுமகேந்திரா தொடங்கி வைக்கிறார். தமிழின் முன்னணி இயக்குனர்கள், டெக்னீசியன்கள், நடிகர்கள் வகுப்பு எடுக்கிறார்கள். இறுதி நாளில் குறும்படம் எடுக்கவும் வகை செய்யப்படும்.
பட்டறையில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிழல் ஆசிரியர் திருநாவுக்கரசை 94444 84868 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
|