ஆனால், 'சிங்கம்' விஜய்க்கு சிக்காதுபோல. விஷயத்திற்குள் புகும்முன் சின்ன பிளாஷ்பேக்.
ஹரியின் முழுநீள கமர்ஷியலில் நடிக்க விஜய்க்கு நெடுநாள் ஆசை. விஜய்யை இயக்க ஹரிக்கும் விருப்பம். 'வேல்' படத்தை விஜய்யை வைத்து இயக்க ஹரி விரும்பியதாகவும், 'அழகிய தமிழ் மகனி'ல் விஜய் பிஸியாக இருந்ததால் முடியாது என மறுத்ததாகவும் தெரிகிறது. 'வேல்' வெற்றியடைய 'அழகிய தமிழ் மகன்' தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து 'சேவலி'ல் நடிக்க விஜய் முயன்றதாக கேள்வி.
ஆனால், விஜய்யின் விருப்பத்தை நிராகரித்து பரத்தை 'சேவலி'ல் நாயகனாக்கினார் ஹரி. மேலும், 'சேவல்' டைட்டிலை விஜய் தரப்பு கேட்டபோது தரமறுத்துவிட்டார் ஹரி என்றும் கூறுகிறார்கள்.
இரண்டு நாள் முன் நடந்த விழாவொன்றில், சூர்யாவை வைத்து அடுத்தப் படத்தை எடுப்பதாகவும், படத்தின் பெயர் 'சிங்கம்' என்றும் கூறி விஜய் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
விஜய் படத்துக்கு 'சிங்கம்' பெயரை வைக்க யோசனை நடந்து வருவதால்தான் 'சேவல்' முடியாத நிலையில் தனது அடுத்தப் படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
|