அவருக்குள் ஆர்வத்தை தூண்டிய அந்தப்படம், 'உளியின் ஓசை!'
முதல்வர் கருணாநிதி எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி என்ற வரலாற்று கதையை 'உளியின் ஓசை' என்ற பெயரில் இயக்கினார் எழுத்தாளர் இளவேனில். படம் தொடங்கியது முதல் அதன் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கேட்டு தெரிந்து கொண்டார் முதல்வர். பாடல் ஒன்றையும் எழுதியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.
படத்தின் ஒவ்வொரு பகுதி முடியும்போதும் அதனை திரையிட்டுப் பார்த்தவர், மொத்த திரைப்படத்தையும் இரண்டு நாள் முன்பு பார்த்தார்.
படத்தின் இறுதிக் காட்சியில் அலைமோதிய உணர்ச்சியுடன் இளவேனிலை மனதார பாராட்டினார் முதல்வர். இளையராஜா இசையமைத்திருக்கும் 'உளியின் ஓசை' தமிழ் திரையில் பெரும் சத்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.
|