கலைஞர்கள் சில நாட்கள் முன்பு கலைநயத்துடன் உருவாக்கியவை. உருவான இடம், ஹைதரபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி.
'குசேலன்' படத்தில் ரஜினி, நயன்தாரா இடம் பெறும் பாடல் காட்சி ஒன்று உள்ளது. வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்த அவகாசமில்லை. பார்த்தார் பி.வாசு. வெளிநாட்டையே உள்ளூரில் உருவாக்கிவிட்டார்.
எகிப்து பிரமிடுகளை அப்படியே ராமோஜிராவ் திரைப்பட நகரில் உருவாக்கி அதன் பின்னணியில் ரஜினி, நயன்தாராவின் டூயட்டை படமாக்கியிருக்கிறார்கள்.
பி.வாசு சொன்ன பிரமிட் ஐடியா ரஜினியை கவர, அவரது ஒப்புதலின் பேரில்தான் பிரமிட்கள் உருவாக்கப்பட்டனவாம்.
ஜூலை 18 'குசேலன்' பிரமிட்களை ரசிகர்கள் திரையில் கண்டு ரசிக்கலாம்.
|