'பொம்மரிலு' ரீ-மேக்கில் ரவி, ஜெனிலியா!
- 16.05.2007
By JBR
சென்ற வருடம் ஆந்திரா புயலுக்கு இணையாக அங்கு புழுதி கிளப்பிய படம் 'பொம்மரிலு.' நம்மூர் பாஸ்கர் என்பவர் இயக்கியது. சித்தார்த், ஜெனிலியா நடித்த இந்தப் படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்க போட்டா பேட்டி.
|
|
|
விஜய், விஷால் உள்பட இளம் ஹீரோக்கள் அனைவரும் 'பொம்மரிலு' வை பார்த்தனர். இதன் ரீ-மேக் உரிமையை வாங்க பிரகாஷ்ராஜும் ஆர்வம் காட்டினார்.
யார் போட்டியிட்டால் என்ன? ரீ-மேக் குடும்பம் களத்தில் இறங்கினால் வெற்றி அவர்கள் பக்கம்தானே! ஆம், எடிட்டர் மோகன் அண்டு சன்ஸ் 'பொம்மரிலு' வின் தமிழ் ரீ-மேக் உரிமையை கைப்பற்றியுள்ளது.
தெலுங்கில் சித்தார்த் நடித்த வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். ஜெனிலியா நடித்த வேடத்தை தமிழிலும் ஜெனிலியாவே செய்கிறார். படத்தை இயக்குவது ரவியின் அண்ணன் ராஜா.
'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்' என ராஜா இயக்கிய மூன்று படங்களுமே தெலுங்கு ரீ-மேக். நான்காவது படமாவது நேரடி தமிழ்படமாக இருக்கும் என தமிழ் சினிமா உலகம் எதிர்பார்த்தது. குறைந்தபட்சம் மலையாளம், இந்தி, கன்னட படங்களின் ரீ-மேக்கையாவது இயக்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ராஜா அனைத்தையும் பொய்யாக்கி மீண்டும் தெலுங்கு ரீ-மேக்கையே இயக்குகிறார்.
இதெல்லாம் இவங்களுக்கு போரடிக்கவே செய்யாதா?
|