ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக இருக்கும் அவரது பெயர் ஆகாஷ் தீப் சைகல். வாயில் நுழையாமல் பெயர் எப்படி வழுக்குகிறதோ, அதேபோல் சைகலுக்கு தமிழ் தகராறு.
திருவல்லிக்கேணியில் சைகலை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார் இயக்குனர் கே.வி.ஆனந்த். பிரிண்டிங் பிரஸ் பின்னணியில் காட்சிகள் எடுக்கப்பட்டன. கதைப்படி வில்லன் ஏரியாவாம் அது.
சைகலுக்கு தமிழ் வசனங்களை சொல்லி தந்தார் ஆனந்த். தமிழை சுத்த இந்தி போன்று சைகல் உச்சரித்தார். இரண்டு மூன்று முறை சொல்லிக் கொடுத்தும் பலனில்லை. பிறகு வசனம் சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றார், படத்தின் கதை வசனத்தை எழுதியிருக்கும் இரட்டை எழுத்தாளர்கள் சுபாவில் ஒருவரான பாலா.
ஒருநாள் முழுவதும் சொல்லிக் கொடுத்ததில் சைகல் பேசியது ஒரே வரி, "அவனால என்னை ஒண்ணும் பண்ண முடியாது!"
ஒருவரி வசனத்திற்கே ஒருநாள் என்றால், முழுப்படத்திற்கும் சைகலை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்?
|