வழிக்கு வருவாரா வைகைப்புயல்?
- 16.05.2008
By JBR
வடிவேலு 'பச்சை நிறமே' தயாரிப்பாளர்கள் மீது புகார் கொடுத்திருப்பது தெரியும்.
|
|
|
'பச்சை நிறமே' தயாரிப்பாளர்கள் வேறு தயாரிப்பாளர் ஒருவரிடமிருந்து வடிவேலுவின் பயன்படுத்தப்படாத காமெடி காட்சிகளை வாங்கி, தங்கள் படத்தி்ல் பயன்படுத்திக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்தார் வடிவேலு.
நியாயம் வடிவேலுவின் பக்கம் இருப்பதால் சமரசத்துக்கு இறங்கி வந்திருக்கிறது 'பச்சை நிறமே' தயாரிப்பாளர்கள் தரப்பு. வடிவேலுவை கேட்காமல் அவரது காட்சிகளை, படத்தில் சேர்த்ததும், விளம்பரங்களில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தியதும் தவறுதான் என ஒப்புக்கொண்டிருக்கிறார், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான கார்க்கி.
வடிவேலுவின் சம்மதத்துடன் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் வைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கார்க்கி.
வடிவேலுவின் சம்மதத்தின் விலை அதிகமாக இருக்குமே...தாங்குவாரா கார்க்கி?
|