சுசி.கணேசன் இயக்கிய 'பைவ் ஸ்டார்' படத்தில் அறிமுகமானவர் கனிகா. அதற்குப் பிறகு தமிழ், மலையாள மொழிப்படங்கள் சிலவற்றில் நடித்தவர், தற்போது 'பழஸிராஜா' என்ற மலையாளப் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார்.
கனிகா தமிழில் நடித்த குறிப்பிடத்தகுந்த படம் என்று 'வரலாறு' படத்தைச் சொல்லலாம். அதன்பிறகு வாய்ப்புகள் அதிகம் அவருக்கு வரவில்லை.
இந்நிலையில் கனிகாவுக்கு அவர் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அடு்த்தமாதம் பதினாறாம் தேதி கனிகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மணமகன் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார். பெயர் ஷியாம் ராதாகிருஷ்ணன். சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கனிகா-ஷியாம் ராதாகிருஷ்ணன் திருமணம் நடைபெறுகிறது.
|