சிபிராஜ் திருமண வரவேற்பு : முதல்வர் வாழ்த்து
- 16.09.2008
By Amalan
எட்டு வருடங்களாக பொத்தி வைத்திருந்த சிபிராஜின் காதல் கல்யாணத்தில் முடிந்துள்ளது.
|
|
|
ஸ்டுடண்ட் நம்பர்-1 படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சிபிராஜ். சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரேவதிக்கும் இவருக்குமிடையே எட்டு வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. எட்டு வருடங்களாக தங்களது காதலை பெற்றோரிடையே வெளிப்படுத்தாமல் இருந்த சிபியும்-ரேவதியும் கடந்த வருடம் தங்களது வீட்டில் காதலை தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் சிபி-ரேவதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.
முதல் அமைச்சர் கருணாநிதி நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் சிபிராஜ்-ரேவதி இருவரும் முதல் அமைச்சரின் காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். மணமக்களை அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்த்தினர்.
நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார், விஜயகுமார், நெப்போலியன், மோகன், ராஜேஷ், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், விவேக், மந்சூர் அலிகான் ரித்தீஷ். சார்லி, மனோபாலா, வாகை சந்திரசேகர், நடிகைகள் கே.ஆர்.விஜயா, ராதிகா சரத்குமார், ரேவதி, அர்ச்சனா, ஸ்ரீப்ரியா, டைரக்டர்கள் பாலுமகேந்கிரா பி.வாசு, சுரேஷ் கிருஷ்ணா, தங்கர் பச்சான், லிங்குசாமி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
அனைவரையும் சத்யராஜ், அவருடைய மனைவி மகேஸ்வரி சத்யராஜ், மகள் திவ்யா, மணமகளின் பெற்றோர்கள் வைத்தியநாதன், உமாதேவி ஆகியோர் வரவேற்கிறார்கள்.
|