'அவ்வை சண்முகி' உள்ளிட்ட படங்களில் சின்ன வேடங்களில் நடித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாகும் படம் 'சற்று முன் கிடைத்த தகவல்.'
ஒரு கொலை செய்துவிட்டு மனநோயாளி போல் நடித்து மனநல காப்பகத்துக்கு வருகிறார் கனல் கண்ணன். அவரை மோப்பம் பிடித்து, அதே மனநோயாளி செட்டப்பில் மனநல காப்பகத்தில் நுழைகிறார் போலீஸ் அதிகாரியான கருணாஸ். இவர் எப்படி கனலை துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை.
இந்த இரு 'மனநோயாளி'களுக்கும் சிகிச்சை அளிக்கும் மனநல மருத்துவராக கவுசல்யா நடிக்கிறார்.
படத்தின் ஹீரோ கனல் கண்ணன் என்றாலும் அவருக்கு நிகரான வேடத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ். இவர் ஷோலோ ஹீரோவாக நடிப்பதற்கான அஸ்திவாரத்தின் மூலக்கல் இந்த 'சற்று முன் கிடைத்த தகவல்.
சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த தக்காளி சீனிவாசன் மிக நீண்ட இடைவெளிக்கும் பின் இப்படத்தை இயக்குகிறார்.
|